×

ஓய்வூதியர் தின விழா

நெல்லை, டிச. 23:  நெல்லை மாவட்ட மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். அமைப்பாளர் சண்முகசுந்தரராஜ் வரவேற்றார். மாவட்ட ஓய்வுபெற்ற சிறை பணியாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் முத்துமுகமது, மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஓய்வூதியர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000, 40 சதவீத ஒப்படைப்பு தொகை மற்றும் முழு ஓய்வூதியம் பெறுவதற்கான சேவைக்காலம் 20 ஆண்டுகள் என ஓய்வூதிய பலன்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய உதவி தலைவர் கணபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர் நலச்சங்க செயலர் ராதாகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர் கதிர்வேல்ஆறுமுகம், நெல்லை மாநகர ஓய்வூதியர் சங்க தலைவர் சிதம்பரம், மாவட்ட எஸ்பிஐ ஓய்வூதியர் சங்கம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் சீத்தாராமன் நன்றி கூறினார்.

Tags : Retirement ,
× RELATED தினமும் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்...