தனித்துவமான நகை டிசைன்களால் ஜொலிக்கும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால்

சென்னை: போத்தீஸ் நிறுவனம் 1940ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறிய பட்டுப்புடவை கடையாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து 80 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சேவையை அளித்து எல்லோரின் மனதிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. தற்போது, மக்களின் பல்லாண்டு தேவையை நிறைவேற்ற போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் முதல் ஷோரூம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, இதன் 2வது கிளை சென்னை குரோம்பேட்டையில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கப்பட்டது.

மக்களின் வாழ்வில் தங்க மயமான மகிழ்ச்சியை நிரப்பி வரும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகைகளின் வடிவமைப்புகள், அவர்களின் வாழ்வில் நடைபெறும் உன்னதமான விழாக்களையும், கொண்டாட்டங்களையும் பேரழகுடன் அலங்கரிக்கின்றன. போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஒவ்வொருவரின் வளமான பயணத்திலும், செழிப்பையும், சவுபாக்கியத்தையும் சேர்த்து தனது தங்க நகைகளின் பேரழகை போல தனித்துவமாக ஜொலிக்க வைக்கிறது. தங்க நகைகளில் மட்டுமல்லாமல் வைரத்திலும் தனித்துவமான மேன்மையை படைத்துள்ளது.

Related Stories: