காய்கறி நேற்றைய விலை நிலவரம் (1 கிலோ) க.பரமத்தி அருகே தொட்டியபட்டி பகுதியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

க.பரமத்தி, டிச. 23: க.பரமத்தி அடுத்த மொஞ்சனூர் அருகேயுள்ள தொட்டியபட்டி பகுதியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ தொடங்கி வைத்து பேசினார். இல்லம் தேடி கல்வி என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி அரசு பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியபட்டி தொடக்கப்பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டியபட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். க.பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் நவீன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து பேசியதாவது: கொரோனா காலத்தில் 19 மாதங்கள் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத நிலை இருந்ததால் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டது. அதை களைய மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கி வைக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வகுப்பு வரை இந்த திட்டம் அந்தந்த பள்ளிகளுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நடைபெற உள்ளது என பேசினார். தொடர்ந்து விழிப்புணர்வு குழுவினர் கலந்து கொண்டு பெற்றோர்கள் வீட்டிற்கே வந்து கல்வி கற்று தருவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரியர் சாமிநாதன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: