×

கரூர் உழவர்சந்தை காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி குளித்தலை தனி தாசில்தார் அலுவலகத்தில் கருத்து கேட்பு


குளித்தலை, டிச. 23: கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தொடர்பாக கருத்துக்கேட்பு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டம் நேற்று குளித்தலை பரிசல் துறை சாலையிலுள்ள தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நதிநீர் இணைப்பின் முதல் கட்டமாக மாயனூர் காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியான மாவட்டத்திற்கு கொண்டு சென்று விவசாயத்தை செழிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க திட்டம் தீட்டியது. இதன் முதல் கட்டமாக காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கப்பட்டது. மாயனூர் தலைப்பு பகுதியில் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதியாம்பட்டி வரை முதல் கட்டமாக நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை வாய்க்கால் வெட்டும் பணி கிட்டத்தட்ட 50 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் குளித்தலை சுற்றியுள்ள அய்யனேரி, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம் வை .புதூர்ஆகிய பகுதிகளில் வாய்க்கால் வெட்டுவதற்கு நிலங்களை கொடுப்பவர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபனை தெரிவித்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி குண்டாறு திட்ட டிஆர்ஓ கவிதா தலைமை வகித்தார். தாசில்தார் பழனி, மகுடீஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Cauvery ,South ,Tasildar ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...