நாகை உழவர்சந்தை செம்பனார்கோயிலில் குறுங்காடு வளர்ப்பு திட்டம்

செம்பனார்கோயில், டிச.23: செம்பனார்கோயிலில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் குறுங்காடு வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் (சீர்காழி), ராஜகுமார் (மயிலாடுதுறை), கண்ணன் (ஜெயங்கொண்டம்), மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் கார்த்திகேயன் வேலுசாமி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன் வரவேற்றார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினார். விழாவில் மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர், ஊராட்சி மன்ற தலைவர் விசுவநாதன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: