×

கலெக்டர் பங்கேற்பு ராமகிருஷ்ணபுரம் ஊராட்சியில்

வேதாரண்யம், டிச.23:ராமகிருஷ்ணபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியரை பணிமாற்றம் செய்யக்கூடாது என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வட்டார கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். வேதாரண்யம் நகராட்சி பகுதி ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 56 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் அரசு உத்திரவுப்பு பழமையான கட்டிடம் ஒன்று இருந்ததை இடிக்கபட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார். இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினா கட்டிடம் இடிப்பதில் எந்தவித முறைகேடும் நடை பெறவில்லை. சிதிலமடைந்த கட்டிடங்களை அரசு இடித்து அப்புறப்படுத்த கூறியதால்தான் இந்த பழமையான மாணவர்களின் நலன் கருதி இடிக்கப்பட்டது. அதுவும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அனுமதியோடுதாந் இக்கட்டிடம் இடிக்கப்பட்டது என்றும், பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும் பள்ளியின் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்யர் கூடாது என்றும் வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் சிவகுமாரிடம் மனு அளித்து உள்ளனர்.

Tags : Ramakrishnapuram ,
× RELATED குப்பை கூட்டிய தகராறில் சிறுவன் படுகாயம்: தம்பதி மீது வழக்கு