புதுச்சத்திரம் அருகே மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

சேந்தமங்கலம், டிச.22: புதுச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி ஊராட்சி ஆர்.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து(30). இவரது மனைவி சாய்லட்சுமி(24) இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். முத்து கோழிப்பண்ணையில் வேலை செய்து வருகிறார். மது பழக்கத்திற்கு அடிமையான முத்து, வாங்கும் சம்பளம் பணம் முழுவதையும் குடித்தே செலவழித்துள்ளார். இதனால், கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முத்துவை சாய்லட்சுமி கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த முத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: