×

ராஜபாளையம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

ராஜபாளையம், டிச. 22: ராஜபாளையம் அருகே உள்ள புதூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன், ஒன்றியப் பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 1,225 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் டாக்டர் கோவில்ராஜ், உதவி இயக்குனர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு உதவி மருத்துவர்கள் துரைமாஸ்கோ, மலர், ராமசுப்பிரமணியம், ஜெயராஜ், சுந்தர் ராஜ் ஆகியோர் மருந்து, மாத்திரை வழங்கினர். மேலும், மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு, கருமுட்டை வளர்ச்சி ஆகியவை குறித்து ஸ்கேன் எடுத்தனர். முகாமில் கிடேரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட மூன்று  சிறந்த கிடேரிக் கன்றுகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பு முறையை பின்பற்றும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த மேலாண்மை நடைமுறை விருதை எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் வழங்கினார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!