தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திருச்சுழியில் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

திருச்சுழி, டிச. 22: திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராமத்தில் தனியார் சோலார் பிளான்ட் இயங்கி வருகிறது. இந்த பிளாண்டில் பணிபுரியும் செக்யூரிட்டி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் தொடர்பாக சோலார் பிளாண்ட் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால் நவ.27ல்  தொழிலார்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சோலார் பிளாண்ட் நிர்வாகம், செக்யூரிட்டி நிர்வாகம் மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘தொழிலாளர்களுக்கு வேண்டிய போனஸ், ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒரு வாரக் காலத்திற்குள் செய்து தருவதாக எழுத்து மூலமாக ஒப்புதல் பெறப்பட்டது. இதனால், காத்திருப்புப் போராட்டம் விலக்கப்பட்டது. ஆனால், எழுத்து பூர்வமாக ஒப்புதல் அளித்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், செக்யூரிட்டி நிர்வாகம் மற்றும் சோலார் பிளாண்ட் நிர்வாகத்தை கண்டித்து திருச்சுழியில் தேசிய வங்கியின் முன்னால் ஒரு நாள் அடையாள போராட்டம் நேற்று நடத்தினர். இதையடுத்து செக்யூரிட்டி நிறுவன அதிகாரி தங்கமாரியப்பன் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சிஐடியு சங்கத்ததலைவர் கோபி மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 2021 தீபாவளி போனஸ் ஒருவாரத்திற்குள் வழங்கப்படும், மற்ற கோரிக்கைகள் மதுரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.                     அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு எஸ்ஐஎஸ் தொழிலார்கள் தலைவர் கோபி தலைமை வகித்தார். சிஐடியு கன்வீனர் சுரேஷ்  குமார்  முன்னிலை வகித்தார். மேலும்,  உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர்  சாராள், சிஐடியு மாவட்டச் செயலாளர் தேவா, சிபிஎம் தாலுகா  செயலாளர்  மார்க்கண்டன்,  சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகன்,   அன்புச்செல்வன், சிபிஎம் திருச்சுழி கிளைச் செயலாளர் ரமேஷ் மற்றும் எஸ்ஐஎஸ்  சோலார் பிளான்ட் செக்யூரிட்டி தொழிலாளர்கள்  உட்பட 70க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

Related Stories: