×

அதிகரிக்கும் டெங்கு திருப்பூர் ஜி.ஹெச்.சில் 29 பேர் சிகிச்சை

திருப்பூர், டிச. 22:  திருப்பூர் மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநகரில் டெங்கு பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.  இவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாகவே டெங்குவால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே திருப்பூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் உள்ள காந்திநகரில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் மருந்து அடிக்கும் பணியும் நடந்தது.

Tags : Tirupur GH ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா