குரு பூஜை விழா

கோவை டிச.22: மேட்டுப்பாளையம் தோகை மலை அகஸ்தியர் ஞான சக்தி ஆலயத்தில் குரு மகரிஷி அகஸ்தியருக்கு குரு பூஜை விழா நாளை (23ம் தேதி) நடக்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரம் அகஸ்தியர் அவதார நாள். இந்த ஆலயத்தில் சந்தன மகாலிங்கம் சுவாமி, நந்தி பகவான், பதினெண் சித்தர்கள், சப்த ரிஷிகள் வழிபாடு நடத்தப்படும். கணபதி, மகா ருத்ர ஹோமம், குரு பூஜை, சங்காபிஷேகம், ருத்ர அபிஷேகம் நடத்தப்படும். நீண்ட ஆயுள், தொழில் வியாபாரம் வளர்ச்சி, வீடு, மனை யோகம், குழந்தை பாக்கியம், கடன் தீர, திருமண தடை நீங்க இந்த வேள்விகள் நடத்தப்படுகிறது.

Related Stories: