மாநில அளவிலான சிலம்ப போட்டி சீர்காழி மாணவர்கள் தங்கம் வென்றனர்

சீர்காழி, டிச.22: திருச்சியில் மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் சீர்காழி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர். திருச்சி விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் சீர்காழி சமுஇ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் அஸ்வந்த், 7ம் வகுப்பு மாணவன் ஆதவன், 8ம் வகுப்பு மாணவன் சபரிநாதன், 9ம் வகுப்பு மாணவன் சிவபிரவீன் ஆகியோர் தனித்திறன் பிரிவில் நெடுகம்பு சிலம்பம் மற்றும் தொடு சிலம்பம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தலா இரண்டு தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பள்ளி செயலாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள் முத்துக்குமார், துளசிரங்கன், வரதராஜன், உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்க்கண்டன், சக்திவேல் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: