ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் ₹18.38 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ராஜேஷ்குமார் எம்.பி.,தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலம், டிச.21: புதுச்சத்திரம் ஒன்றியம், ஏகே.சமுத்திரம் ஊராட்சி, முத்துக்குமரன் நகரில் ₹18.38 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கௌதம் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு, புதிய குடிநீர் திட்டப் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத் தலைவர் ராம்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனோகரன், முருகேசன், தங்கமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாபு, ஒன்றிய அமைப்பாளர் குமார், நிர்வாகிகள் செங்கோட்டையன், கைலாசம், பூபாலன், கேசவன், சந்திரன், சசிதரன், பெரியசாமி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: