×

நாமகிரிப்பேட்டையில் 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமகிரிப்பேட்டை, டிச.21: நாமகிரிப்பேட்டை பகுதிகளில் 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயில்பட்டியில், 6.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, உடையார் பாளையம் கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாய்க்கன் பட்டியில் ₹7 லட்சம் மதிப்பீட்டில் பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகளை, அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஊத்துப்புளிக்காடு ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவிகளின் கற்றல் திறனை பார்வையிட்டு சிறப்பாக திறனை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். தாண்டாகவுண்டன் புதூர், தாத்தாகவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் ஈஸ்வர மூர்த்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள், பென்சில் வழங்கினார்.

ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு  அமைச்சர் மருந்து, மாத்திரைகளை வழங்கினார். வயதான பெண்ணுக்கு மாத்திரை வழங்கி அவருக்கு உடல் உறுப்புகளை இயக்க பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் செல்வராஜூ, ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், பிடிஓ சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Mathivendan ,Namagiripettai ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...