×

மூத்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி பொன்னுசாமி எம்எல்ஏ வழங்கினார்

சேந்தமங்கலம், டிச.21: சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா துத்திக்குளம் ஊராட்சி, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, சேந்தமங்கலம் பேரூராட்சிகளில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு, பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து 11 மூத்த திமுக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் நடேசன், நகர செயலாளர் தனபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், மகளிரணி அமைப்பாளர் ராணி, ஒன்றியக்குழு தலைவர் மணிமாலாசின்னசாமி, துணைத் தலைவர் கீதா வெங்கடேசன், குணசேகரன், பிரபாகரன், ஈஸ்வரன்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponnusamy MLA ,Porkizhi ,DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்