×

திருச்செங்கோட்டில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது

திருச்செங்கோடு, டிச. 21: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், நாளை (22ம்)தேதி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் சமூக  இடைவெளியுடன் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும், நகர் புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஆலோசனை நடக்கிறது.

Tags : West District DMK Executive Committee ,Tiruchengode ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்