×

கடத்தூர் அருகே ₹46 லட்சத்தில் தார்சாலை பணி

கடத்தூர், டிச.21: கடத்தூர் அடுத்த ஒபிளிநாயக்கனஅள்ளி ஊராட்சி, முத்தனூர் ஓம்சக்தி கோயில் முதல் ந.நடூர் வரை, மண்சாலையை தார் சாலையாக மாற்ற ₹29 லட்சம் மதிப்பில், ஊராட்சி மன்றத்தின் மூலம் பூமி பூஜை போடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவி ஞானம்வடிவேல், முன்னால் தலைவர் வடிவேல், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், துணை தலைவர் அம்புரோஸ், பாமக ஒன்றிய செயலாளர் கலைமணி, சிவன், சென்னகிருஷ்ணன், சென்னப்பன், திருமுருகன், ரஜினி, ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், அஸ்தகியூர் குழிக்கொல்லை கிராமத்தில், தார்சாலை அமைக்க ₹17.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை நடந்தது.

Tags : Darsala ,Kadatur ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...