ஆத்தூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஆறுமுகநேரி, டிச. 21: ஆத்தூர் பகுதியில் புகையிலை விற்ற வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். ஆத்தூர் எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது நரசன் விளை, தெற்குத் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (36) என்பவரது பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். இதில் அவர்  புகையிலைப் பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்த போலீசார், கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: