சென்னை விமான நிலையத்தில் ரூ.35.39 லட்சம் மதிப்புள்ள தங்கம் மின்னணு சாதனங்கள் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச  விமான நிலையம் வந்தது. அதில் வந்த ஒரு பயணியை சுங்கத்துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது தங்க பசை உடைய ஒரு பொட்டலத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் ரூ.11.73 லட்சம் மதிப்பிலான 266 கிராம் தங்கப்பசை இருந்தது தெரிய வந்தது. இதுபோல், துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியை சோதனையிட்டதில் ரூ.18.88 லட்சம் மதிப்புடைய 428 கிராம் தங்கப்பசை, தங்க செயின் மற்றும் ரூ.4.78 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories: