காலதாமதமின்றி ஊதியம் வழங்கக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், டிச.21: வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தேர்வு, சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்கக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாய கடன் வழங்க குறியீடு நிர்ணயித்து பணியாளர்களை குறைவாக நடத்த வேண்டாம். மாநில அளவில் கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும். வாய்மொழி உத்தரவை கைவிட வேண்டும். பொங்கல் தொகுப்பு பேக்கிங் செய்ய அனுமதி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு தேர்வு, சிறப்பு நிலை ஊதியம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: