விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம் ₹20 லட்சத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ெநடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு

வேலூர், டிச.21: பாலாற்று வெள்ளத்தால் சேதமான விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை ₹20 லட்சத்தில் தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெருக்கெடுத்த பாலாறு, பொன்னை, கவுண்டன்யா ஆற்று வெள்ளத்தில் மாதனூர் அடுத்த உள்ளி, விரிஞ்சிபுரம், பொன்னை தரைப்பாலங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதையடுத்து இத்தரைபாலங்களை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாலாற்று வெள்ளத்தால் ஒருபக்கம் சேதமான விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க ₹20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் சரவணன் நேற்று நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் மாநில நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்டத்தில் சேதமடைந்த சாலைகள், மேம்பாலங்கள் சீரமைக்க ₹1 ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: