×

அங்கன்வாடி மையங்களை நூறு நாள் வேலை ஆட்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அணைக்கட்டு எம்எல்ஏ வலியுறுத்தல்

அணைக்கட்டு, டிச.21: நூறு நாள் வேலை ஆட்களை கொண்டு அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வலியுறுத்தினார். அணைக்கட்டு ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் சித்ரா குமாரபாண்டியன், பிடிஓ சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்றார்.

இதில் எம்எல்ஏ நந்தகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், ‘இதுபோன்ற பயிற்சி கூட்டத்திற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களும் பங்கேற்க செய்ய வேண்டும். அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் நூறு நாள் வேலை ஆட்களை வைத்து சுத்தம் செய்ய ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார். இதில் மோஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் தேன்மொழிசெல்வன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் 2021- 2022ம் ஆண்டில் வீடு கட்ட, பிரதமரின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்கும் விழாவில் எம்எல்ஏ நந்தகுமார் கலந்து கொண்டு, அணைக்கட்டு, அப்புக்கல், ஊனை, கரடிகுடி உள்பட 10 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 300 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கி பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கீதா வெங்கடேசன், செந்தில், கிரிதரன், நஸ்ரின்பானு அஸ்லாம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், அறிவழகன், துணை பிடிஓக்கள் ஜெயந்தி, சதிஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dam ,MLA ,Anganwadi Centers ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...