திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் காவிரி டெல்டா பகுதியில் மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

வல்லம், டிச.21: காவிரி டெல்டா பகுதியில் அதிகளவு பெய்த பருவ மழையிலிருந்து பயிர்களை காப்பாற்றி உரம் தெளிப்பு, களையெடுப்பு உட்பட பல பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை மானிய விலையில் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் தர்ம.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து பெய்த தொடர் கனமழையால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மத்திய குழுவினர் வந்து பாதிப்பு இடங்களை பார்வையிட்டனர். இதற்கிடையில் வயல்களில் தேங்கியிருந்த வெள்ளநீரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் வெளியேற்றினர்.

மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர். தற்போது வெள்ளத்தில் இருந்து தப்பிய பயிர்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகம் உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில உரத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும் தேவையான உரமும் சரியான அளவில் கிடைக்காமல் பல பகுதிகளில் கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே விவசாயிகளுக்கு தேவையான உரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு கடன்கள் வழங்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும்.

Related Stories: