×

குடிசையில்லா தமிழகம் என்பதே முதல்வரின் லட்சியம்

பொன்னமராவதி, டிச.21: குடிசையில்லா தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் லட்சியம் என சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். பொன்னமராவதி வர்த்தகர் கழக மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சுதாஅடைக்கலமணி, டிஆர்ஓ செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அமைச்சர் ரகுபதி 208 பயனாளிகளுக்கு ரூ.43.62லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பொன்னமராவதி பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கேட்ட கோரிக்கைளில் ஒருசில கோரிக்கைகள் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிசை இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் லட்சியம் அந்த வகையில் வீட்டுமனைப்பட்டா வழங்கி அவர்களுக்கு புதிதாக வீடுகட்டுவதற்கான உத்திரவும் வழங்கப்பட்டுள்ளது.

தூத்தூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப பட்டுள்ளது. போதிய இடம் இருந்தால் பொன்னமராவதி பேரூந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பொன்னமராவதியை நகராட்சியாக்க பக்கத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைத்து 30ஆயிரம் மக்கள் தொகை உள்ளபடியாக உருவாக்கி நகராட்சியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமரகண்டான் ஊரணியின் நடைபாதை அமைக்கப்பட்டு பூங்கா அமைக்க ரூ2.80 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே திருமயம் தொகுதி மற்றும் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனப்பேசினார். முன்னதாக இலுப்பூர் ஆர்டிஓ தண்டாயுதபாணி வரவேற்றார். முடிவில் தாசில்தார் ஜெயபாரதி நன்றி கூறினார். இதில் ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேசன், சதாசிவம், பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், நகரச்செயலாளர் அழகப்பன், நகர காங்கிரஸ் தலைவர் பழனியப்பன், வட்டாரத் தலைவர் கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadam ,
× RELATED அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை...