விராலிமலையில் மலைக்கோயில் நடராஜருக்கு ஆருத்ர தரிசனம்

விராலிமலை,டிச.21: விராலிமலை முருகன் மலைக்கோவிலில் நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் மலைக்கோவில் உள்ளது. 207 படிகள் கொண்ட இந்த மலைமேல் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு வருடம்தோறும் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். தற்போது தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் மலைக்கோயில் மேல்புற மண்டபத்தில் இவ்விழா சம்பிரதாய விழாவாக மட்டுமே நடைபெற்றது. இதில் நடராஜ சுவாமிக்கு சிறப்பி அபிஷேக, அலங்காரம் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: