ஆருத்ரா தரிசனம் பசுபதீஸ்வரா கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

கரூர், டிச.21: ஆருத்ரா தரிசன விழாவினை முன்னிட்டு நேற்று கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தது. கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஆருத்ரா தரிசன விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. முன்னதாக, பசுபதீஸ்வரா கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் காலை திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. அலங்காரவள்ளி சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை பசுபதீஸ்வரா கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்தது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: