திருச்சுழி அருகே ஊராட்சி தலைவர் காரை மறித்து நகை வழிப்பறி தாக்குதலில் 3 பேர் படுகாயம்

திருச்சுழி, டிச. 20: திருச்சுழி அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து 2லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, செல்போன் பறிக்கப்பட்டது. அத்துடன் வழிப்பறிக்கும்பல் தாக்கியதில் மூவர் காயமடைந்தனர். திருச்சுழி அருகே உள்ள கொப்புச்சித்தம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெய்சங்கர். இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஜெய்சங்கர் மற்றும் அதே ஊரைச்சேர்ந்த பாலமுருகன், ராஜேந்திரன் ஆகிய மூவரும் அபிராமம் சென்று விட்டு ஊருக்கு திரும்பும் போது நார்த்தம்பட்டியிலிருந்து கொப்புச்சித்தம்பட்டி செல்லும் வழியில் இவர்களை டூவீலரில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் காரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்பு இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் செல்போன் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மர்மநபர்கள் தாக்கியதில் ஜெய்சங்கர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையிலும், பாலமுருகன், ராஜேந்திரன் ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: