×

சாஸ்தா கோவில் அணைக்கட்டு பகுதியில் சுற்றுச்சூழலை கெடுக்கும் பொருட்களுக்கு அனுமதி வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு

ராஜபாளையம், டிச. 20: ராஜபாளையம் சாஸ்தா கோவில் அணை நீர்தேக்கம் வனப்பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை பயன்படுத்த அனுமதிப்பதாக வனத்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சாஸ்தா கோவில் நீர்த்தேக்க அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து ஆறு மூலம் மழை நீரானது சாஸ்தா கோவில் நீர் தேக்கத்திற்க்கு வந்தடைகிறது. கொரோணா விதிமுறை காரணமாக இப்பகுதி ஆற்றில் இரண்டு வருடங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை அனுமதியளித்தது.  இந்நிலையில் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் விதமாக பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் குளிர்பான வகைகள் என சுற்றுலாப்பயணிகள் வனப்பகுதிக்குள் எடுத்து சென்றதுடன் சமையல் செய்வதற்கும் பாத்திரங்கள் கொண்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனப்பாதுகாவலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது போன்ற சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கையால் வனப்பகுதிகள் உள்ள உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும், வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை முழுமையான சோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பணம் பெற்று அனுமதித்த சம்பந்தப்பட்ட வனப்பாதுகாவலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Shasta temple dam ,
× RELATED ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டியது