×

உத்தமபாளையத்தில் போக்குவரத்து விதி குறித்து மாணவர்கள் கலந்தாய்வு

தேவாரம், டிச. 20: உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில்,பஸ்சில் பயணம் செய்கின்ற மாணவ, மாணவிகள் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பஸ்சின் படிக்கட்டில் நின்றுசெல்லக் கூடாது.

சில மாணவர்கள் பஸ்சில் ஜன்னல் வழியே தொங்கி செல்கின்றனர்.இவ்வாறு செல்வதால் விபத்து ஏற்பட்டு அந்த மாணவனின் குடும்பம் பெரும் துயரம் அடைகிறது. மாணவர்கள் பஸ்சில் தொங்கி கொண்டு செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் பள்ளி முடிந்து பஸ்சில் ஏறும் போது வரிசையாக செல்ல வேண்டும். சாலையில் நடந்து சென்றாலும் விதிகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மனோகரன் அறிவுறுத்தினார்.

Tags : Uthamapalayam ,
× RELATED பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி