×

நன்மை தருவார் திருத்தலத்தில் மார்கழி மண்டல உற்சவ கொடியேற்றம்

ஆண்டிபட்டி, டிச.20: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நன்மை தருவார் திருத்தலத்தில் மார்கழி மண்டல உற்சவம் விழாவிற்கான கொடியேற்ற விழா நேற்று நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நன்மை தருவார் திருத்தலத்தில் உள்ள ஐயப்பசாமி ஆலயத்தில் நேற்று 18ம் ஆண்டு மார்கழி மண்டல உற்சவம் விழாவிற்கான கொடியேற்றம் விழா நடைபெற்றது.

இந்த திருத்தலத்தில் 49 அடி உயரமுள்ள மாகாளியம்மன் சன்னதி உள்ளது. இந்த கொடியேற்ற விழாவை தொடர்ந்து வரும் 26ம் தேதி ஐயப்ப சாமி பவனி புறப்பாடு நிகழ்ச்சியும், 27ம் தேதி மாகாளியம்மன் சிலைக்கு பாலாபிஷேகம், பூச்செரிதல் மற்றும் ஐயப்ப சாமி சன்னதியில் 18ம் படி பூஜை நடைபெறும். மேலும் அன்று அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த கொடியேற்றம் விழாவில் கோயில் நிர்வாகி முத்து வன்னியன் மற்றும் விழா கமிட்டியினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Markazhi Zone Festival ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...