உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு மின்சாதன பொருட்கள் வழங்கல்

உத்தமபாளையம், டிச.20: உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் மின்சாதன பொருட்கள் வழங்கப்பட்டது. உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாரதி, மருத்துவமனையின் அடிப்படை வசதிகளுக்கு தேவையான பொருள்கள் வழங்கிட கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் முயற்சி செய்து ரூ.60,000 மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் நகர தலைவர் சகுபர் சாதிக் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் கம்பம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ஜெய்னுலாபுதீன், நகர துணைதலைவர் காதர் முகைதீன், செயற்குழு உறுப்பினர் இத்ரீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: