×

ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், டிச.20: எஸ்டிபிஐ கட்சி கேரள மாநில செயலாளர் ஷான் படுகொலையை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழா மண்ணஞ்சேரியில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை கேரள அரசு கைது செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் நூருல் அமீன், கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், விசிக மண்டல பொறுப்பாளர் யாசின், பெரியார் பேரவை நிர்வாகி நாகேந்திரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் ஆகியோர் பேசினர். இதில் பலர் பங்கேற்றனர்.

Tags : STBI ,Ramanathapuram ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்