கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் ஆத்தூரில் மருத்துவ முகாம்

சின்னாளபட்டி, டிச.20: ஆத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆத்தூர் ஊராட்சியில் உள்ள ஆர்.சி.இருதயம் நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பரத்கண்ணன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சையது அபுதாகிர், ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ முகாமில் ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி, மல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்த 1040 பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர் சிகிச்சை பெறவேண்டியவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் ஏஞ்சலின் ஜென்சி, நிவேதாராணி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார ஆய்வாளர்கள் சந்திரமோகன், ரெங்கசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: