எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 90 பேர் கைது

கோவை, டிச.20:  எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் கே.எஸ்.ஷான். இவர், நேற்று முன்தினம் ஆலப்புழாவில் அடையாளம் தெரியாத நபர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் சானவால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், படுகொலை செய்த நபர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஒன்றிய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஸ்தபா, மண்டல தலைவர் ராஜா உசேன், மாநில செயற்குழு உறுப்பினர் அபுத்தாஹிர், மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல்கரீம், முகமது இசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தடைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: