×

கோவையில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா

கோவை, டிச. 20:  பேராசிரியர் அன்பழகனின் 100-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் திமுகவினர் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  நா.கார்த்திக் தலைமையில், திமுகவினர் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், மெட்டல் மணி, பகுதி கழக பொறுப்பாளர் சேதுராமன், சிங்கை சிவா, மார்க்கெட் மனோகரன், பிரபாகரன், மு.ரா.செல்வராஜ், க.பிரபாகரன், கோவை சம்பத், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், சரவணன், சந்திரமோகன், கல்பனா செந்தில், சித்ர கலா, அனந்த நாராயணன், சுப்பிரமணிய தென்னவன், ராம்நகர் ராமநாதன், ஆர்.எஸ்.புரம் பூபாலன், சாதிக், சிங்கை பிராபாகரன், அக்ரி பாலு, மானூர் புகழேந்தி, ராம்குமார், சாரமேடு இஸ்மாயில், டவுன் ஆனந்த், தமிழ்செல்வன், டெம்போ சிவா, சந்தீப் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்.எஸ்.புரம் பகுதி 24-வது வட்டம் சார்பில் பேராசிரியர் படத்திற்கு பகுதி செயலாளர்  கார்த்திக் செல்வராஜ் மலர்தூவி மரியாதை செய்து 300 பேருக்கு மதிய உணவு வழங்கினார். இதில், வட்ட செயலாளர்கள் வி.ஜெகதீசன், ஆறுச்சாமி, பழக்கடை ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் சுலைமான், நாசர், வேலுகண்ணன் அக்ரோமயில்சாமி, ,ஆல்வின், மகேஷ், ஆர்.எஸ்.புரம் ராஜன், முருகானந்தம், புலவர் பழனிச்சாமி, கே.ஜோதிமணி, நவுசாத், அமான், உமர்சரிப், பாஷா, நட்ராஜ், ரவி, சங்கர், சரவணன், சுதந்திரம், ஜெயராமன், செந்தில்குமார், பழனிச்சாமி, சக்திவேல், கோகிலா, கோமதி, மலர்மணி, கவிதா, விக்னேஷ், அருண், மோகன், சந்தோஷ், சேதுபதி, அன்பரசு, அருண், நவீன், பாலாஜி, முஸ்தபா, கவுதம், ஹாரிஸ், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவை மாநகர் மேற்கு மாவட்டம்,  கணபதி பகுதி 46-வது வட்ட தளபதி மன்றத்தின் சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கணபதி சம்பத்குமார், கணபதி முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பொறுப்புக்குழு உறுப்பினர் பிரகாஷ், மாணவரணி தர்மா, இளைஞரணி கணபதி ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், கண்ணையன், சுமோ சேகர், காமராஜ், ஈஸ்வரன், கிரில் ராஜன், சதீஷ், ஆர்டிஆர் கார்த்தி, மாதேஷ், கணபதி, கார்த்தி, மகளிர் அணி மலர்விழி, சீலா, பாப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Anpalagan ,Coimbatore ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...