ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் வழிகாட்டுதல்படி கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்  ஞானமணி தலைமையில் இந்த பயிற்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேசும்போது, `ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு துறையினர் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு குழந்தை வளர்ச்சித் திட்டம் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் பட விளக்க காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சத்தான உணவு வகைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் கண்காட்சியும் வைக்கப்பட்டது.

Related Stories: