வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

திருத்தணி:  திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால். ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ராதரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு முதல், இன்று அதிகாலைவரை அபிஷேகம் நடந்தது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு 9 மணிக்கு, ரத்தின சபாபதி பெருமான் கோயில் வளாகம் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

தொடர்ந்து, விபூதி, பால், தேன், இளநீர், மாதுளம், வாழைப்பழம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 33 வகையான அபிஷேகம் நடந்தது. நடராஜருக்கு இன்று அதிகாலை, 3:30 மணி வரை நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமாள் ஆலமர பிரகாரத்தை வலம்வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் கோபுர தரிசனத்தை தரிசனம் செய்து `அரோகரா அரோகரா’ என்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்திலிருந்து பல பகுதிகளிலிருந்து சிவனடியார்கள் விரதம் இருந்து வந்தனர்.  பையனை சபையில் நடராஜர் தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: