உத்திரமேரூர் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு

உத்திரமேரூர், டிச.20: உத்திரமேரூர் அருகே அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடங்களை அகற்றி, அந்நிலங்களை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர். உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்புலியூர் கிராம ஏரிக்கரை அருகே அரசுக்கு சொந்தமான நீர்நிலை பகுதிகளை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்தனர். புகாரின்பேரில் அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினருக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரும்புலியூர் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை நேற்று முன்தினம் வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டியிருந்த கட்டிடங்களை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். பின்னர் அந்த நிலங்களை மீட்டு, அங்கு பாதுகாப்பு வேலி அமைத்து, எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: