×

பவுர்ணமி மற்றும் விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருப்பு

திருவண்ணாமலை, டிச.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி மற்றும் விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தியதாலும், மேல்மருவத்தூர், சபரிமலை மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள புகழ்மிக்க கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலில் தவறாமல் தரிசித்து செல்கின்றனர்.

இதற்கிடையில், கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் கோயிலில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2 வாரங்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, அந்த சமயத்தில் கோயிலுக்கு வர இயலாத பக்தர்கள், தற்போது தரிசனத்துக்காக வருகின்றனர். இந்நிலையில், நேற்று மார்கழி மாத பவுர்ணமி மற்றும் விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. எனவே, கோயில் வெளி பிரகாரம் வரை பக்தர்கள் தரிசன வரிசை நீண்டிருந்தது.

ராஜகோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை காணப்பட்டது. தரிசனத்துக்கு சென்ற பக்தர்களிடம் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ேமலும், வழக்கம்போல், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியில் மட்டுமே தரிசனம் ெசய்ய அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் மற்ற சன்னதிகள், பிரகாரங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த 2 நாட்களாக அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

Tags : Annamalaiyar Temple ,Swami ,Pavurnami ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...