×

முத்துப்பேட்டையில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

முத்துப்பேட்டை,டிச.20: முத்துப்பேட்டை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் மனோகரன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டை வட்டார குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் கண்டுநர் சுற்றுலா, திறன் மேம்பாட்டு பயிற்சி, செயல்விளக்கங்கள். பண்ணைபள்ளி இன்னும் பல திட்டத்தின் இனங்கள் வாரியாக செயல்படுத்திடவும் வேளாண்மை மற்றும் துறைகளை கொண்டு ஆலோசனை குழு பிரதிநிதிகள் மூலம் ஆலோசிக்கப்பட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது சாதிக் தோட்டக்கலையின் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதில் உதவி தொழில் நுட்ப மேலாளர் சவுமியா மற்றும் அட்மா திட்ட ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொழில் நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags : Adma ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...