×

100வது பிறந்தநாள் விழாவையொட்டி பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

திருத்துறைப்பூண்டி, டிச. 20: திருத்துறைப்பூண்டியில் பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்திற்கு எம்எல்ஏ நீலமேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்த நாளையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் திமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையொட்டி திருத்துறைப்பூண்டியில் நகர செயலாளர் ஆர் .எஸ் பாண்டியன் தலைமையில் தஞ்சை மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான நீலமேகம் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கார்த்திக், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Prof. ,Anpalagan ,
× RELATED இஸ்லாமியர் குறித்து வெறுப்பு...