×

மன்னார்குடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு தேர்வு

மன்னார்குடி, டிச. 20: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பித்து இருந்தவர் களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் கணினி வழித்தேர்வு மன்னார்குடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்ட ங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் 1முதல் 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2 தன்னார்வலர்களை நியமித்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகிறது.12 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் தன்னார்வலர்களுக்கான கணினி வழி தேர்வு நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக மன்னார்குடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் 65 தன்னார் வலர்கள் கலந்து கொண்டனர். கணினி முன் அமர்ந்து 50 வினாக்களுக்கு விடை யளித்தனர்.

இதில் கலந்து கொண்ட தன்னார்வலர் எழிலரசி கூறுகையில், எங்களுக்கு வழங்கபட்ட 50 கேள்விகளும் ஆழ்ந்த புரிதலோடு அதுவும் குழந்தைகள் மனநிலை, பெற்றோர்கள் மனநிலை, சமூக மனநிலை இவற்றின் உளவியல் தெளிவுகளை இவற்றைக் புரிந்து கொண்டு பதில் அளிக்கும் வகையில் இருந்தது. இவை அனைத்தும் அப்ஜெக்டிவ் டைப்பில் இருந்தது.மேலும் இந்த பணி என்பது அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிற பணி.இந்த பணி எனக்கும் கிடைத்தால் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கெடுத்த மகிழ்வு என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்றார். இந்த கணினி வழி தேர்வினை, மன்னார்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கபாபு, முரளி, சிவராமகிருஷ்ணன் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் நடத்தினர்.

Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...