சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

கும்பகோணம், டிச.20: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று (20ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு  நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 6 மணிக்கு நடராஜர் இந்திர விமானத்தில் இரட்டை வீதி புறப்பாடும், காலை 9 மணி முதல் 12 மணிக்குள்  ஆதி கும்பேஸ்வரர் கீழரத வீதியில்  சிவாலய நடராஜர் சந்திப்பு உற்சவம், திருமுறை பாராயணம், மங்கல இன்னிசை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

அதுபோல  கௌதமேஸ்வரர் சுவாமி,  காளஹஸ்தீஸ்வர சுவாமி,  பாணபுரீஸ்வர சுவாமி,  கோடீஸ்வர சுவாமி,  ஏகாம்பரேஸ்வர சுவாமி,  நாகேஸ்வர சுவாமி,  சோமேஸ்வர சுவாமி,  ஆதி கம்பட்ட விஸ்வநாத சுவாமி, காசி விஸ்வநாத சுவாமி,  அபிமுகேஸ்வர ஸ்வாமி மற்றும் திருபுவனம்  கம்பகரேஸ்வர சுவாமி, திருவிடைமருதூர்  மகாலிங்கம் சுவாமி உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனமும், சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது. மேலும், பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருவாதிரை பெருவிழா இன்று அதிகாலை 4 மணியளவில் அபிஷேக ஆராதனையுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 7 மணிக்கு நடராஜபெருமான், சிவகாமி அம்பாள் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில்களின் நிர்வாக அதிகாரிகள், தக்கார், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: