×

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணம், டிச.20: கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் இந்திராணி திருமண மண்டபத்தில் முன்னாள் ராணுவ நல சங்கம் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ வீரர்களின் மறைவிற்கு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 2ம் தேதி 13வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. ஆண்டு விழாவில் அனைத்து முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கநாதன், உபதலைவர் மணி இணை செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kumbakonam ,
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...