அன்பழகன் படத்திற்கு திமுகவினர் மாலை கூட்டுறவு வேளாண் வங்கிகளில் கடனை திருப்பி செலுத்த 31ம்தேதி வரை அவகாசம்

புதுக்கோட்டை, டிச.20: கூட்டுறவு வேளாண் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த, இம்மாதம் 31ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2014 மார்ச் 31ம்தேதி தவணைத் தவறிய பண்ணாசாராக் கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு திட்ட செயலாக்க காலம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்ணை சாராக் கடன் திட்டத்தின் கீழ் 126 நபர்கள் அசல் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டிய தொகை ரூ.3.76 கோடியாகும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்கனவே 25 சதவீதம் செலுத்தியோர், மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும், இதுவரை இத்திட்டத்தில் சேராத கடன்தாரர்கள் உடனே சேர்ந்து ஒரு தவணையில் கடனை திருப்பி செலுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: