×

கரூர் வெங்கமேடு பகுதியில் விற்பனைக்கு வந்தது கரும்பு

கரூர், டிச.20: கரூர் வெங்கமேடு பகுதியில் கரும்பு விற்பனை வந்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் கரும்பு வாங்கிச் சென்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். பொங்கல் சமயத்தில், கரூர் ஆசாத் சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், கோவை ரோடு, தாந்தோணிமலை, ராயனூர், பசுபதிபாளையம், காந்திகிராமம், வடிவேல் நகர், வெங்கமேடு, இனாம்கரூர் போன்ற பகுதிகளில் அதிகளவு கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம், புதுக்கோட்டை, திண்டிவனம் போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீசன் நாட்கள் மட்டுமின்றி, எப்போதும் கரும்பின் தேவையும், அதன் சுவையும் மக்களுக்கு பிடிக்கும் என்பதால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே விற்பனை செய்யப்பட்டு வரும் கரும்பினை பொதுமக்கள் வெங்கமேடு பகுதிக்கு சென்று ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Karur Vengamedu ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே மகள் காதல் திருமணம் தாய் தற்கொலை