நெல்லை பல்கலையில் கருத்தரங்கு

நெல்லை, டிச.20: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இணையதள நூலகம் என்னும் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக நூலகர் திருமகள் தலைமை வகித்தார். இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தை சேர்ந்த விரிவுரையாளர் பிருந்திரன், பாலமதி பிருந்திரன் ஆகியோர் பேசினர். இணையதள நூலகம் பயன்பாடு குறித்தும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் அடிப்படையில் நூலகத்தின் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர்கள், முதுகலை நூலகத்துறை மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக நூலகத்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். உதவி நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: