இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

நெல்லை, டிச.21: சுத்தமல்லி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்விதுறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கலைக்குழு தலைவர் தம்பிதுரை முன்னிலையில் நடந்தது. கலைக்குழுவினரை பள்ளி தலைமைஆசிரியர் தம்பிராட்டி வரவேற்றார். மானூர் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் ரவிகுமார் தலைமையேற்று நடத்தினார். ஆசிரியர் காளியப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் சந்தானலெட்சுமி, லதா, பொன்னுகுட்டி, செண்பகராஜன் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Related Stories: