×

500 ஏக்கர் விளைநிலங்களை பாதுகாக்க தருவைகுளத்திலிருந்து தாங்கைகுளத்திற்கு புதிய கால்வாய் அமைக்க முதல்வர் மனு

உடன்குடி, டிச.18: குலசேகரன்பட்டினம் பகுதி விவசாயிகள் தமிழக முதல்வர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, உடன்குடியிலிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் உள்ளது. தொடர் மழையால் இக்குளம் முழுமையாக நிரம்பி, தற்போது வெள்ள நீர் மணப்பாடு கடலுக்கு வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதை தடுக்கவும், சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்கவும், விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள அனைவரும் விவசாய தொழிலை மேம்படுத்தவும், தருவைகுளத்திலிருந்து கொட்டங்காடு வழியாக செல்லும் மெயின் ரோட்டின் கரையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக கால்வாய் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் வரும் போது தாங்கை குளமும் நிரம்பி விடும். இதனால் சுமார் 500ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்.

சடையநேரி கால்வாயில் வரும் தண்ணீரால் சடையநேரிகுளம் முழுமையாக நிறைந்து, மறுகால் பாய்ந்து தாங்கைகுளத்திற்கு தண்ணீர் வரும் முன் பல இடர்பாடுகள் உள்ளது. எனவே தாங்கைகுளம் வருடந்தோறும் முழுமையாக நிரம்பிட புதியதாக கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Chief Minister ,Daruvaikulam ,Thangaikulam ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...