×

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதியில் இன்று மின்தடை

தூத்துக்குடி, டிச. 18: தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிகளில் இன்று 18ம்தேதி மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி துணை மின்நிலையத்தில் இன்று 18ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஆண்டாள் தெரு, சத்திரம் ரோடு, போல்பேட்டை, 1ம்கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோ நகர், விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோயில் தெரு, டபுள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளை ரோடு, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரையில் மின்தடை செய்யப்படுகிறது.

ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்  நடைபெறுவதால் ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

கோவில்பட்டி: கோவில்பட்டி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  விஜயாபுரி,  சிட்கோ, எம்.துரைசாமிபுரம்,  சன்னது புதுக்குடி துணை மின்நிலையத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் இன்று (18ம்தேதி)  மாதாந்திர பராமரிப்பு பணி  நடைபெறுகிறது. இதனால் விஜயாபுரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட  திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி,  கசவன்குன்று, துறையூர்,  காமநாயக்கன்பட்டி பகுதிகளிலும், சிட்கோ துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட  முத்துநகர்,  ஜோதிநகர், புதுரோடு ஆகிய இடங்களிலும், எம்.துரைசாமிபுரம் துணை  மின்நிலையத்திற்குட்பட்ட வானரமுட்டி,  காலாங்கரைப்பட்டி,  குமரெட்டியாபுரம், சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புதூர்,  இடைசெவல்,  சத்திரப்பட்டி, வில்லிசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் சன்னது புதுக்குடி துணை  மின்நிலையத்திற்குட்ட கயத்தாறு  பேரூராட்சி பகுதிகள், ராஜாபுதுக்குடி,  ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம்,  கொடியன்குளம், புளியம்பட்டி உள்ளிட்ட  பகுதிகளில் இன்று காலை 9 முதல் மதியம் 3  மணி வரை மின்விநியோகம் இருக்காது என  தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi ,Ottapidaram ,Kayatharu ,
× RELATED சாலை விபத்தில் ஒடிசா வாலிபர் பலி